Skip to content

பரிசுத்த வேதாகமம்

வேதாகமத்தின் தோற்றம் எங்கே?

“வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” (2பேதுரு 1:20-21)

ஏறத்தாள 1,500 ஆண்டுகளுக்கும் மேலான கால அளவில், கண்டவைகளையும் கேட்டவைகளையும் எழுத பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 நபர்களின் இருதயங்களை தேவன் ஏவினார். கேட்கப்பட்ட போதனைகள், கதைகள் மற்றும் நேரில் கண்ட காரியங்கள் யாவும் வாய்மொழியாகவும், கற்பலகையிலும் மற்றும் புத்தகச்சுருளில் எழுதப்பட்டு பின்சந்ததியாருக்கு அறிவிக்கப்பட்டது. பின் அவ்வார்த்தைகள் எல்லாம் ஒன்றினைக்கப்பட்டு ஒரு முழு பரிசுத்த வேதாகமமாக தொகுக்கப்பட்டது.

பரிசுத்த வேதாகமமானது, தேவன் தம்மை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இருக்கிறது. தேவன் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் தமது ஒரே தாசநான இயேசு கிறிஸ்து மூலமாக அவர் நம்மிடத்தில் பேசுகிறார். இப்படியாக, தேவன் மனிதர்களோடு தொடர்புக்கொண்ட வரலாற்று பதிவுகளும் வேதத்தில் இடம்பெற்றுள்ளன. இவ்வரலாற்று நிகழ்வுகளும் தேவ செய்திகளும் யார் மெய்யான தேவன், மனிதர்களின் தோற்றத்தின் வரலாறு மற்றும் தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கும் காரியங்களைக் குறித்து பரிசுத்த வேதாகமம் நமக்கு தெரிவுப்படுத்துகிறது.

தேவனின் தாசனாகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்த இரட்சிப்புதான் வேதாகமத்தின் பிரதான நோக்கமாக இருக்கிறது. தேவனோடு உண்டான தமது உறவை மீண்டும் நிலைநாட்டவும் பரலோக இராஜ்யத்திற்கு உண்டான வழியைக் காட்டவும் தமது ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு அனுப்பியதையும் வேதாகமம் நமக்கு விளக்குகிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், பரலோக இராஜ்யத்தை அடையும் வழியைப் பற்றியும் மேலும் அறிய விரும்பினால், பரிசுத்த வேதாகமம்தான் இவைகளுக்கு மூல ஆதாரம்.

பரிசுத்த வேதகமானது தேவனுடைய வார்த்தைகளால் உண்டானவை என்று எப்படி உறுதி செய்வது?

i. வேதாகமத்தில் உள்ள ஒற்றுமைகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, 40 வெவ்வேறான எழுத்தாளர்கள் இயற்றப்பட்ட ஒரே நிலைபாட்டினையும் கோர்வையும் கொண்ட வேதாகமத்தைப் போன்ற வேறு இலக்கிய படைப்பு தோன்றவில்லை. ஆதியாகமம் புத்தகத்தின் முதல் வெளிப்படுத்தின விஷேச புத்தகம் வரை கர்த்தருடைய இரட்சிப்பு திட்டமானது ஒன்றின் பின் ஒன்றாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். பரிசுத்த வேதாகமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பற்ப கருப்பொருள் உள்ளடக்கிய போதனைகளை உள்ளடக்கியிருந்தாலும், அவைகள் எழுத்தாளர்களிடையே எந்த முரண்பாட்டினையும் ஏற்படுத்தவில்லை. வேதாகம்மமானது ‘நாம் எவ்விடத்திலிருந்து தோன்றினோம்?”, “நாம் இறந்த பின் எங்குச் செல்வோம்?” மற்றும் “நம் சிருஷ்டிகரோடு

ii. The historical and geographical accuracy of the Bible

Modern archeological findings have confirmed the accuracy of the people, places, and historical events recorded in the Bible. New discoveries continue to affirm rather than discredit the Bible.

iii. The prophetic accuracy of the Bible

Deuteronomy 18:22 tells us that the test of a prophet’s authority is the accuracy of his predictions. Measuring the Bible by its own test, we find that hundreds of prophecies recorded in the Bible have been fulfilled, including the rise and fall of major world empires (Egyptian, Assyrian, Babylonian, Persian, Greek/Hellenic, Roman); the destruction of Jerusalem and the temple; the birth and death of Jesus Christ; the re-establishment of the nation of Israel; the ageless enmity between Jews and Arabs.

iv. வேதாகமத்தைக் குறித்த அறிவியல் ரீதியான துள்ளிதம்

இந்த வேதாகமம் அறிவியல் சார்ந்த புத்தகமாக இல்லதிருந்தும், இதில் குறிப்பிடப்பட்ட பல காரியங்கள் வேதாகமம் எழுத்தப்பட்ட காலத்திலிருந்து நூற்றாண்டுகள் கடந்து அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

v. வேதாகமத்தில் குறிப்பிடபட்டுள்ள நிறைவேற்றபட்ட வாகுத்தத்தங்கள்

கர்த்தரை நம்பி கீழ்படுபவர்களுக்கு வேதாகமத்தில் கர்த்தர் பல வாகுத்தத்தங்களை வழங்கியுள்ளார். இன்றைய வாழ்வில், வேத வசனங்களை நம் வாழிவில் கடைப்பிடிக்கும்போது தேவ ஆசிவாதங்களை நம்மால் உணர இயலும். உதாரணமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன் அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவி பெற்றது போலவே, இன்றும் நம் விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு ஜெபத்தின் மூலம் அசுத்த ஆவிகள் துரத்தப்படுகின்றன, நோய்வாய்ப்பட்டவர்கள் குணமாக்கப்ப்டுகின்றனர், மரித்தோர் எழுப்பப்படுகின்றனர்! நம்முடைய அன்றாட வாழ்வில் கர்த்தரின் வழிக்காட்டுதலையும் பரிசுத்த ஆவியின் வல்லமையையும் நம்மால் உணர இயலுகின்றது. நமது கஷ்ட காலங்களில் ஆறுதலடையவும், பலப்படவும் சமானத்தை உணரவும் களிக்கூரவும் வேத வசனங்கள் நமக்குத் துணைப்புரிகின்றன. இவை யாவும் வேதாகமத்தில் குறிப்பிடபட்டுள்ள வாகுத்தத்தங்கள் விசுவாசிகளுக்கு நிறைவேற்றபடுவதின் சான்றாகும்.

எப்படி நான் வேதாகமத்தை மேலும் புரிந்துக்கொள்வது?

i. வேதாகம ஆய்வுக்கு தகுந்த நேரத்தைச் செலவளிக்க வேண்டும்.

வேதாகமத்தை பற்றி ஆய்வுச் செய்வதைக் காட்டிலும் வேதாகமத்தை வாசித்தல் மிக அவசியமாகும். ஒவ்வொரு நாளும் வேதாகமத்தை வாசிப்பதற்கு நம் தகுந்த நேரத்தை ஒதுக்க வேண்டும் (உதாரணமாக, காலை நேரம்). வேத வாசிப்பின்போது நம் கவனம் சிதறாமலிருக்க வேலை, குழந்தைகள், நண்பர்கள், போன்ற காரியங்களை தவிர்த்துவிட்டு, ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கர்த்தர் நமக்கு கூற வரும் வசனங்களுக்கு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். தவறாமல் சபை ஆராதனைகளுக்கு செல்வதையும் வேதாகம ஆய்வில் கலந்துக்கொள்ளுதலும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலும், தேவ ஊழியர்கள் பகிரும் செய்திகளை கேட்பதையும், விசுவாசிகளின் தேவ கிருபைக் குறித்தான சாட்சிகளுக்குச் செவிசாய்ப்பதையும் வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு முழுமனதோடு தேவனை தேடினால், நிச்சம் வேதாகமத்தை மேலும் புரிந்துக்கொள்ள இயலும்.

ii. கர்த்தரின் வழிகாட்டுதலை நாட வேண்டும்.

வேதாகம மொழி என்பது ஒரு குழந்தைக் கூட புரிந்துக்கொள்ளக் கூடிய எளிமையான மொழியாக இருந்தாலும், அதின் அர்த்தங்கள் அறிஞர்களால் கூட புரிந்துக்கொள்ள இயாலாத அளவிற்கு ஆழமாகும். வேதாகமத்தை வாசிக்கும்போது அதனைப் புரிந்த்துக்கொள்ள முழுமையாக நாம் நமது சுய அறிவைச் சார்ந்திருத்தல் கூடாது. நாம் நம்மை தாழ்த்திக்கொண்டு நமது அறியாமையை உணர்ந்து கர்த்தரிடம் வழிகாட்டுதலை கேட்க வேண்டும் காரணம் வேதாகமத்தில், “இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்” (மத்தேயு 11.25) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் வேதாகமத்தை வாசிக்கும் முன்பு, இச்சத்தியத்தைப் பெறும்படிக்கு நமது இருதயத்தையும் மனதையும் தயார்ப்படுத்துவது மிக முக்கியமாகும். தேவ வசனங்களைப் பெற்றுக்கொள்ளும் முன்பு, சற்று நேரம் ஜெபத்திலே செலவளித்து, இந்த வேத வசனங்கள் புரியும்படிக்கும், நம் இருதயத்தையும் மனதையும் ஆவிக்குரிய கண்களையும் திறக்கும்படியாகவும், கர்த்தர் தாமே நம்மை வழிநடத்தி இவ்வசனங்களை உய்த்துணரச் செய்ய வேண்டும் எனவும் ஜெபிக்க வேண்டும்.

மேலும், வேதத்திலே “தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவி என அழைப்படும் தேவனுடைய ஆவியானவர், சத்தியத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், சகல சத்தியத்திற்குள்ளாகவும் நம்மை நடத்துவார். ஆக, வேதாகமத்தைப் புரிந்துக்கொள்ள பரிசுத்த ஆவியின் நிரப்புதலுக்காகவும், கர்த்தருடைய வழிநடத்தத்தலுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும்.

iii. தேவ வசனங்களை நம்பி கீழ்ப்படிய வேண்டும்

வேதத்தத்தின் வழி நாம் கற்கும் பாடங்களை நாம் நம் விசுவாசத்துடன் தொடர்புப்படுத்திக்கொள்ள வேண்டும். விசுவாசம் என்பது ஒன்றை மனதளவில் ஏற்றுக்கொள்வது மட்டுமன்று; விசுவாசம் என்பது நாம் மனதளவில் ஏற்றுக்கொண்ட ஒன்றை நம் வாழ்வில் கிரியைகளாக வெளிப்படுத்துதல் ஆகும். வேத வசனங்களை நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கும் போது, அவ்வசனங்கள் ஜீவனடைந்து, நமக்கு வேதத்தை மென்மேலும் புரிந்துக்கொள்ளத் துணைப்புரியும்.

— யாக்கோபு 1:22-25

“அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாதீரமல்ல, அதின்படி செய்கிறவர்களாய் இருங்கள் – ”

யாக்கோபு 1:22-25

கர்த்தரின் கூறிய வார்த்தைகளாகிய மன்னிக்கும் பழக்கம், உதவி செய்யும் மனப்பாண்மை & நீடிய சகித்தல் போன்றவற்றினை சில நேரங்களில் நாம் தவறுவது உண்டு. ஆனால் தேவனுடைய வசனங்களுக்கு வலிமை உண்டு , அவரின் வார்த்தை சத்தியாமாக இருக்கிறது. நாம் தேவன் மீது நம்பிக்கை வைத்து நம்பினாலே போதும். தேவனின் வாக்கின்படி நாம் அவரின் சத்தியங்களைக் கடைப்பிடிப்போமாகில் அவர் நிச்சயமாக ஆசீர்வாதங்களையும் களிப்பையும் அளவில்லாமல் வழங்குவார்.

வேதாகமத்தின் முக்கிய நோக்கம் யாது ?

“தேவவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது ; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாகம்” – 2 திமோத்தேயு 3 : 16

i. வேதாகமம் நமது வாழ்க்கையின் முறைமையாக அமைகிறது

தேர்வுகள் அதிகமாக இருக்கும் இந்த உலகிலே நமக்கு எது நன்மை என்று முடிவு செய்வது எப்போதும் கடினமான ஒன்றே. சில வேளைகளில் நாம் தேர்ந்தெடுக்கும் முடிவுகள் நமக்கு கசப்பான அனுபவங்களைத் தந்திடும். ஆனால் தேவனுடைய வசனம் நம் கால்களுக்கு தீபமும், நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங்கீதம் 119 : 105). அவை நமது ஜீவனுக்கு ஒரு வழிகாட்டியாக நமது அன்றாட எண்ணக்களுக்கும், பண்புகளுக்கும் மற்றும் நடத்தைக்கும் அமைகிறது.

ii. இந்த வேதாகமம் நமது மனசாட்சிக்கு ஒரு கண்ணாடியாக அமைகிறது.

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தகதாக உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது (எபிரேயர் 4 : 12). இந்த வேதாகமம் நமக்கு ஒரு கண்ணாடி போல நமது குறைகளை எடுக்கு காட்டி நமது எதிர்காலத்தினை சிறப்பாக்க உதவும் கருவியாக இயங்குகிறது. இந்த கண்ணாடியில் நமது அணைத்து மனித தன்மைகளியும் எடுத்து காட்டி நமது மனித பலகீனங்களியும் கூறி அதனையும் எவ்வாறு சரி செய்து வரலாம் என்பதனையும் கூறுகிறது. தாவீதின் ஜெபங்களில் நமக்கு ஆறுதல் கிடைக்க பெறும். பவுலின் நேர்மையானவும் உருக்கமான கடிதங்களில் ஆறுதல்கள் கிட்டும். அவர்களின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டதால் நமக்கு புதுப்பித்தலையும் பலத்தினையும் தருகிறது. (2 பேதுரு 1 : 20-21 ; மாற்கு 12 : 36)

iii. பொல்லாப்பினை வெல்லும் உதமாக வேதாகமம் அமைகிறது.

வெளிச்சம் இல்லா இடங்களில் இருள் சூழந்துக் கொள்ளும். தேவனுடைய வசனங்களை மேலும் மேலும் மீற, இருள் தொடர்ந்து சூழ்ந்து கொள்கிறது. வெளிச்சமும் வேதமும் வழிகாட்டியாக இல்லாமல் நாம் குருடர்களாக சுலபமாக பிசாசின் வலையினில் சிக்கி பாவங்கள் செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தேவவசங்களைச் சுமந்து கொல்ளும் பொழுது தேவனுடைய கண்களில் சரியான காரியங்களை நாம் அறிவோம். தேவவசனமாகிய அவியின் பட்டயத்தையும் எடுத்துகொண்டால் (எபேசியர் 6 : 17) கர்தராகிய இயேசு ஜெயித்தது போல நாமும் ஜெயெங்கொள்ளலாம்.

iii. இந்த வேதாகமம் நமது ஆவிக்குரிய உணவாகும்.

வயிர் நிறைவது திருப்தியினைத் தருகிறதா? தற்காலிகமாக தரும் ஆனால், மனுஷன் அப்பதினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. (மத்தேயு 4 : 4). இயேசு “ நான் உங்களுக்குச் சொல்லுகிற வசங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது “ என்று கூறுகிறார் (யோவான் 6 : 63). தேவ வசங்கள் ஜீவனுள்ள வசங்களாயும் நாம் மீண்டும் இயேசுவுக்குள்ளாக பிறப்பதற்கு கற்றுக்கொடுக்கிறது. தேவனையும் அவரது வசங்களையும் நம்பி கீழ்ப்படிந்து இருப்போமாகில் தேவனின் பிள்ளைகளாகவும் இந்த இரட்சிப்பினையும் பெற்று புதினான வாழ்க்கையினை வாழலாம்.