Skip to content

ஏன் மெய்யான இயேசு சபை?

ஏன் இந்த பெயர்?

மெய்யான தேவன் ஒருவர், அவரின் நாமம் இயேசு, அவர் சபைக்குத் தலையாய் இருக்கிறார் எனும் நம்பிக்கை அடிப்படையில் இப்பெயர் சூட்டப்பட்டது.

img22

நாம் சேவிக்கும் தேவனானவர் மெய்யான தேவனாக இருப்பதால் அவருக்குச் சொந்தமான சபையே மெய் சபையாக இருக்கிறது.

ஆண்டவர் இயேசு தாமே திராட்சச்செடி என்று கருதுவதால், சபையான அவருடைய சரீரம் மெய்யன சபையாக அழைக்கப்படுகிறது.

மெய்யான சபையானது பரிசுத்த ஆவி, அடையாளங்கள் மற்றும் அற்புதங்களாள் உறுதி செய்யப்பட்ட சத்தியத்தையும் சுவிஷேசத்தையும் பிரசங்கிக்கிறது.

(References: 1 Jn 5:20; Jn 15:1,5; 17:3)

மெய்யான சபை பற்றி

மெய்யான இயேசு சபை 1917-இல் சீனா தேசத்தில் பெய்ஜிங் என்கின்ற தலைநகரத்தில் நிறுவப்பட்டது. தொடக்க காலத்தில், அத்தேசத்தில் உள்ள சில தொழிலாளர்கள் பரிசுத்த ஆவியையும் உண்மையான நற்செய்தியின் வெளிப்பாட்டையும் பெற்று, சீனாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிரசங்கிக்கத் தொடங்கினர். தேவனுடைய வல்லமையானது பரிசுத்த ஆவியும் அதனுடன் சேர்ந்த அடையாளங்கள் மற்றும் அற்புதங்களின் வழி வெளிப்பட்டது. இந்நற்செய்தியானது 1926-இல் தைவான், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கு விரைவாக பரவியது. ஆண்டவரின் வழிகாட்டலின் மூலம், ஆசியாவில் சபைகளின் வளர்ச்சி மேலோங்கின. பிற்காலத்தில் மெய்யான இயேசு சபை தைவானில் மிகப்பெரிய கிறிஸ்து சபையாக மாறியது. 1960-களில் முதல் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் நம் சபைகள் நிறுவப்பட்டன. ஆண்டவரின் அதிசயதக்க வழிகாட்டுதலின் வழி மத்திய ஆப்பிரிக்காவிற்கும் மற்றும் தென் அமெரிக்காவிற்கும் நம் சபையின் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது.

பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர் இயேசு சபையை ஸ்தாபித்தது போல மெய்யான இயேசு சபையும் எந்த ஒரு பிரிவிலும் சேராமல் பரிசுத்த ஆவியால் தோற்றுவிக்கப்பட்டது.

நமது சபையைப் பற்றிய கொள்கைகளை மேலும் அறிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த அகப்பக்கத்தின் வழி எங்களோடு இணையுங்கள்.

மேலும் அறிக