Skip to content

திருவிருந்து

திருவிருந்து என்றால் என்ன?

இயேசு சிலுவையில் இறப்பதற்கு முன் திருவிருந்து சடங்கை துவக்கினார். ஞானஸ்நானம் மற்றும் கால் கழுவுதல் சடங்கு போல, இயேசு தன்னில் வாழ்வதற்காக விசுவாசிகளுக்குக் கட்டளையிட்ட ஒரு சடங்காகும்.

எருசலேமில் பஸ்கா விருந்தின் போது இயேசு தம் அன்பான சீடர்களுடன் இறுதி இரவு விருந்து வைத்தார். இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவரிகளுக்கு கொடுத்து, பானம்பண்ணுங்கள், இது என்னுடைய இரத்தமாயிருக்கிறது என்று கூறினார். (மத்தேயு 26:17-30)

திருவிருந்து (இயேசுவின் இராப்போஜனம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இயேசுவின் சீடர்கள் அவர் மீண்டும் வரும் வரை அவருடைய மரணத்தை நினைவுகூருவதற்கு இந்த சடங்கு மேற்கொள்ளபடுகிறது (1 கொரிந்தியர் 11: 24-26). திருவிருந்தின் மூலம் நாம் கர்த்தரோடு ஆவியிலே இணைந்து இருப்பதற்கு ஒரு வழியாக உள்ளது.

திருவிருந்தின் முக்கியத்துவம் என்ன?

i. இயேசு கிறிஸ்துவின் அன்பு

திருவிருந்தில் பங்குகொள்வது என்பது இயேசுவின் தியாகத்தின் அளவை நாம் ருசித்து பார்பதற்க்கு. அவருடைய அன்பின் முழு பரிமாணங்களை உணரந்து கொள்ள வேண்டும்:

  • நமது பாவங்களுக்காக ஒரு பாவியாக துன்பப்பட பரலோகத்தின் இராஜா இறங்கி பூமிக்கு வந்தார்.
  • அனைத்து மனித குளத்தையும் அவரது அரவணைப்பிற்குள் கொண்டுவருவதற்காக அவரது கரங்களின் அகலம் சிலுவையில் அரையப்பட்டது
  • மரணத்தையும் பாதாளத்தையும் கடந்து, வெற்றிகரமான வாழ்விலும் மகிமையிலும் நம்மை வழிநடத்த அவர் உயர்ந்தார்

நாம் புளிப்பில்லா அப்பத்தை புசிக்கும் போது, நகங்களால் உடைக்கப்பட்ட உடலை, அவரது பிளவுபட்ட சதையை நினைவுகூறுகிறோம். நாம் திராட்சரசத்தை பாணம்பண்ணும் போது, அவருடைய காயங்களிலிருந்து சிந்திய இரத்தத்தை நாம் நினைவுகூருகிறோம். அவருடைய துன்பங்களை மட்டும் நாம் நினைவுகூரவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நமக்காக ஆயத்தப்படுத்திய பரலோகத்தில் நித்திய ஜீவனை அறிவிக்கிறோம்.

ii. கிறிஸ்துவின் வாழ்க்கை

சடங்கின் ஆன்மீக விளைவு கிறிஸ்துவின் சொந்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டது:

அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். (யோவான் 6:53-56)

இயேசு கிறிஸ்து தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் உண்ணவும் குடிக்கவும் கொடுப்பார் என்பது ஒரு ஆழமான, அற்புதமான மர்மம் அல்லவா? இது அவரது தியாகத்தின் முழுமையை பிரதிபலிக்கிறது-அவர் தம்முடைய அனைத்தையும் நமக்குக் கொடுத்தார்; அவரது வாழ்க்கை. திருவிருந்தின் மூலம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் நினைவாக மட்டுமல்லாமல், அவர் நமக்குக் கொடுக்கும் ஆவிக்குரிய வாழ்விலும் நாம் இணைக்கிறோம். ஆவிக்குரிய மாம்சத்தையும் இரத்தத்தையும் பெறுவதன் மூலம், கிறிஸ்து நம்மிலும் நாம் அவரிலும் வாசமாயிருக்கிறோம். நாம் கிறிஸ்துவின் ஜீவனால் மட்டுமே நாம் நித்திய ஜீவனைப் பெற முடியும் மற்றும் கடைசி நாளில் உயிர்த்தெழுப்ப முடியும். எனவே, கிறிஸ்துவின் அனைத்து விசுவாசிகளும் திருவிருந்து சடங்கில் பங்கேற்க வேண்டும்.

திருவிருந்து சடங்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும்

i. கூறுகள்

கிறிஸ்து முன்மாதிரியின்படி திருவிருந்து சடங்கை பங்குகொள்ளும்படி அவர் நமக்குக் கட்டளையிட்டதால், நாம் அவர் பயன்படுத்திய அதே கூறுகளைப் பயன்படுத்துகிறோம்: புளிப்பில்லாத அப்பம் மற்றும் திராட்சைப் பழத்தில் செய்யப்பட்ட பானம்.

பஸ்கா உணவில் புளிப்பு எதுவும் இல்லை (லேவி 23:4-9); எனவே, அப்பத்தில் ஈஸ்டு போன்ற எந்த புளிப்பும் இருக்கக்கூடாது, பானத்திலும் எந்த நொதித்தலும் இருக்கக்கூடாது. இவ்வாறு, திருவிருந்தில் புளிப்பில்லாத அப்பம் மற்றும் திராட்சை சாறு பயன்படுத்தப்படுகிறது. சபையின் அளவைப் பொருட்படுத்தாமல், உறுப்பினர்களின் ஒற்றுமையைக் குறிக்க ஒரே ஒரு அப்பம் மற்றும் ஒரு கோப்பு திராட்சரசம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
(1 கொரிந்தியர் 10:17).

ii. நிர்வாகம்

நம்முடைய கர்த்தரைப் போலவே, கிறிஸ்துவின் தியாகம் மற்றும் இரட்சிப்புக்காக நாம் தேவனுக்கு ஸ்த்தோத்திரம் செலுத்துகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், போதகர் ஜெபத்தை மேற்கொள்ளுவார். ஜெபத்தின் பிறகு, புளிப்பில்லாத அப்பத்தின் ஒரு துண்டைப் பிட்டு, சபைக்குக் கொடுக்கப்படும். பின்னர் திராட்சை சாறு பிரார்த்தனை மூலம் புனிதப்படுத்தப்பட்டு சபைக்கு வழங்கப்படுகிறது.

திருவிருந்து சடங்கின் போது, சபையோர்கள் அனைவரும் ஒன்றாக கூடவேண்டும். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம் கிறிஸ்துவின் இரட்சிப்பை நினைவுகூரும் பண்டிகையான பஸ்காவைப் பற்றி இஸ்ரவேலர்களுக்கு தேவன் கட்டளைகளிலிருந்து இந்த அறிவுறுத்தல்கள் உள்ளன. (யாத் 12:10.46)

iii. பங்கேற்பு

ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டுமே திருவிருந்து சடங்கில் பங்கேற்க முடியும். ஏனென்றால் இது கர்த்தருக்கும் அவருடைய சபையோர்களுக்கும் இடையிலான ஆவிக்குரிய கூட்டுறவு ஆகும். யாராவது வேதாகமம் படி ஞானஸ்நானம் பெறவில்லை என்றால், அவர் திருவிருந்து சடங்கில் பங்கேற்கக்கூடாது. ஏனென்றால் அவருடைய பாவங்கள் கழுவப்படவில்லை, மேலும் அவர் இன்னும் கிறிஸ்துவுக்கு சொந்தமானவராக ஆகவில்லை.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலும் இரத்தத்திலும் நாம் பங்கு கொள்கிறோம் என்பதை அறிந்து, திருவிருந்து சடங்கை தீவிரமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துக்கொள்வது முக்கியம். யூதர்கள் பஸ்காவை மேற்கொண்ட போது, ​​அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து புளித்தமாவை அகற்றிபோட்டார்கள். அவ்வாறே, கர்த்தருடைய சரீரத்தைப் பகுத்தறிவதற்காக நாம் திருவிருந்து சடங்கிள் பங்குகொள்ளும்போது நம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்ப வேண்டும் (1 கொரிந்தியர் 11:27-29).திருவிருந்து சடங்கிள் பங்கேற்க்கும் முன், நாம் நம்மை நாமே பரிசோதித்து, எவருக்கும் எதிரான நமது வெறுப்பை நீக்கி, நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டு, கிறிஸ்துவின் சரியான முன்மாதிரியாக வாழ தீர்மானிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவுடன் நான் எப்படி இருக்க முடியும்?

கர்த்தராகிய இயேசு திருவிருந்தின் சட்ங்கிள் உள்ள இரத்தத்தை “புதிய உடன்படிக்கையின் இரத்தம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் (மத்தே 26:28). ஒரு உடன்படிக்கை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினரிடையே ஒரு பிணைப்பு உடன்படிக்கையாகும், இது தேவன் நம்முடன் செய்த உடன்படிக்கை: கிறிஸ்துவின் இரத்தத்தால், சிலுவையில் நமக்குக் கொடுக்கப்பட்டது, நாம் இப்போது கிறிஸ்துவின் குழந்தைகளாக இருக்கிறோம்.

அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நாம் நடந்துகொள்ள வேண்டும் (கொலோசெயர் 1:10). ஆகையால், நாம் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, நாம் பாழங்களை விட்டு வாழ வேண்டும் (1 கொரிதியர் 5:7). கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையை வாழ்வதன் மூலம், நாம் ஆவிக்குரிய உடன்படிக்கையில் பங்கேற்கிறோம்.

தேவன், “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் பானம்பண்ணுகிறவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார் (யோவான் 6:56). ஒவ்வொரு நாளும் நாம் கிறிஸ்துவில் வாழலாம், மேலும் அவர் நம்மில் வாழட்டும். எப்படி? அவருடைய வேத வசனதின் மூலமும் அவருடைய ஆவியால் நிரப்பப்படுவதன் மூலமும் ஆகும். வேதம் வாசிபதன் வாயிலாகமு ஜெபிபதன் வாயிலாகவும் தேவன் நம்மோடு பேசுவது போலவும் நாம் தேவனோடு பேசுவதன் போலவும் உண்ர்கிறோம். நாம் அவருடைய ஆவியால் பலப்படுத்தப்படுகிறோம். நாம் கிறிஸ்துவோடு நெருங்கி வாழ்வதால் அவருடைய சாயலில் அன்பு, பரிசுத்தம், பணிவு ஆகியவற்றில் நாம் வளர்கிறோம். இறுதியில், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலாத்தியர் 2:20).

இருதியாக, நாம் கிறிஸ்துவில் மற்ற விசுவாசிகளுடன் தொடர்பு கொள்ளலாம். திருவிருந்தின் மூலம் விசுவாசிகள் ஒரே உடலாக, ஆவியில் ஐக்கியப்படுகிறார்கள். கர்த்தருடைய மரணத்தை நாம் ஒன்றாக நினைவுகூரும்போது, நம்முடைய சொந்த நலன்களைக் காட்டிலும் மற்றவர்களின் நன்மையைக் கருதவும், அன்புடன் ஒருவருக்கொருவர் சேவை செய்யவும் கற்றுக்கொள்கிறோம். நமது நம்பிக்கையின் நடையில் ஒருவரையொருவர் பலப்படுத்தவும், இந்த உலகத்தின் சுமைகளிலிருந்து மிகவும் தேவையான ஓய்வு பெறவும் ஆராதனையிலும் ஐக்கியத்திலும் நாம் தவறாமல் ஒன்றாக இணைய வேண்டும்.